நா நெகிழ் பயிற்சி 18.10.2017

நா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள்   on Tue Nov 08, 2011 8:04 pm by பி.தமிழ்முகில் இங்கு சில தமிழ் மொழி நா நெகிழ் பயிற்சி வாக்கியங்கள் கொடுத்துள்ளேன். 1)கடலோரத்தில் அலை உருளுது பிரளுது தத்தளிக்குது தாளம் போடுது 2)பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலே பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியருக்கு பைத்தியம் பிடித்தால் எந்த பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கிற வைத்தியர் வந்து அந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பார்ப்பார்? 3)கொக்கு நெட்ட கொக்கு, நெட்ட கொக்கு இட்ட முட்ட கட்ட முட்ட. 4)ஓடற நரியில ஒரு நரி கிழ நரி கிழநரி முதுகுல ஒரு பிடி நிற மயிர். 5)யார் தச்ச சட்டை தாத்தா தச்ச சட்டை

Comments