மான்போா்ட் பள்ளி

ஆங்கிலோ இந்தியர்கள் ஆங்கிலோ இந்தியர்கள் (Anglo-Indians) என்பவர்கள், இந்தியத் துணைக் கண்டத்தில் வாழ்ந்த ஐரோப்பிய ஆண்களுக்கும், இந்தியத் துணைக் கண்டத்து நாட்டு பெண்களுக்கும், திருமண உறவினால் பிறந்த கலப்பின மக்கள் ஆவர்.[5][6][7][8][9]. பிரிட்டிஷ் இந்தியாவில் அனைத்து துறைகளிலும் செல்வாக்குடன் வாழ்ந்த சிறுபான்மைச் சமூகம். இச்சமூகம் பெருநகரங்களை வாழ்விடங்களாக கொண்டது. ஆங்கிலோ இந்தியர்கள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்  இந்தியா Est. 300,000 – 1,000,000 [1]  ஐக்கிய இராச்சியம் ~80,000[2]  மியான்மர் ~19,200  ஆத்திரேலியா 22,000  கனடா 22,000  அமெரிக்கா 20,000  பாக்கித்தான் 1,500  இலங்கை 34,000 மொழி(கள்) ஆங்கிலம் முதல் மொழி மற்றும் இந்தியத் துணைக் கண்டத்து மொழிகள் இரண்டாம் மொழி. சமயங்கள் ரோமன் கத்தோலிக்கம், மெதாடிசம், மற்றும் பாப்டிசம் .[3] தொடர்புள்ள இனக்குழுக்கள் பரங்கியர்கள், இந்தோ ஆரியர்கள், திராவிடர்கள், பிரித்தானிய மக்கள், ஆங்கிலோ பர்மியர்கள், ஸ்காட்டிஷ்-இந்தியர்கள், ஐரிஷ்-இந்தியர்கள், கிரிஷ்டங் மக்கள், சிங்கப்பூர் ஐரோப்பியர்கள் ஆங்கிலோ-இந்தியர் வெள்ளையர் அல்லராயினும், ஆண்களும் பெண்களும் ஐரோப்பியரைப் போல சட்டை அணிந்து ஆங்கிலம் பேசி வந்தனர். அதனால் தமிழ்நாட்டில், ஆண்களைச் சட்டைக்காரர் என்றும் பெண்களைச் சட்டைக்காரி என்றும் குறிப்பிடும் வழக்கம் தோன்றியது.[10]. தற்போது இந்தியாவில், ஆங்கிலோ இந்திய சமூகம் அருகி வரும் சமூகமாக உள்ளது.[11][12] வாழ்விடம் தொகு நவீன ஆங்கிலோ-இந்திய சமூகம் மிகவும் சிறுபான்மை சமூகமாகும். இச்சமூக மக்கள் இந்தியா, இலங்கை, மியான்மார், வங்காளதேசம், பாகிஸ்தான், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை போன்ற முன்னாள் ஆங்கிலேயே காலனி நாடுகளில் வாழ்பவர்கள். ஆங்கிலோ-இந்தியர்கள், இந்தியாவில் தில்லி, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, மும்பை, கோவா, விசாகப்பட்டினம், விஜயவாடா, ஹைதராபாத், கான்பூர், லக்னோ, கோயமுத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, போத்தனூர், கொல்லம், கோழிக்கோடு, கண்ணனூர், மைசூர், கோவா, ஆக்ரா, குர்தா ரோடு, கட்டக், போன்ற நகரங்களில் வாழ்ந்தனர்.[13] மொழி தொகு ஆங்கிலம் முதல் மொழியாகவும், இந்தியத் துணைக்கண்டத்து மொழிகளை இரண்டாம் மொழியாக அறிந்தவர்கள். சமயம் தொகு ஆங்கிலோ-இந்தியர்கள், கிறித்தவ சமயத்தின் உட்பிரிவுகளான ரோமன் கத்தோலிக்கம், பாப்டிசம், மெதாடிசம், புராட்டஸ்டண்டு சமயங்களை பின்பற்றுபவர்கள். கலாசாரமும் பண்பாடும் தொகு ஆங்கிலோ-இந்தியர்கள் தங்கள் வாழ்க்கை முறையை முற்றிலும் ஐரோப்பிய கலாசாரம் மற்றும் பண்பாட்டைத் தழுவி வாழ்கிறார்கள்.

Comments